இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா- பிரதமர் மோடி சந்திப்பு .
. ஈட்டி எறிதல் இந்தியாவின் வீரர் நீரஜ் சோப்ரா, 27.கடந்த 2021ல் டோக்கியோஒலிம்பிக்கில் தங்கம், பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இந்த ஆண்டு தோஹா டைமண்ட் லீக் தொடரில், தனது கனவு இலக்கான 90.23 மீ., துாரம் ஈட்டி எறிந்துசாதித்தார். இவருக்கு ராணுவத்தில் 'லெப்டினன்ட் கவுரவ கர்னல்' அந்தஸ்து வழங்கி கவுர விக்கப்பட்டது. உலகதடகளசாம்பியன் ஷிப்பிலும் பதக்கங்கள் வென்றார்.
தனது மனைவி ஹிமானி மோர் உடன், நேற்று நீரஜ் சோப்ரா பிரதமர் மோடியை, டில்லியில் உள்ள அவரது அதிகாரப் பூர்வ இல்லமான 'லோக் கல்யாண் மார்க்'கில் சந்தித்தார்.
இது பற்றி பிரதமர் மோடி சமூகவலைத் தளத்தில் வெளியிட்ட செய்தியில், “நீரஜ் சோப்ரா, அவரது மனைவியை சந்தித்தேன். விளையாட்டு உட்பட பல்வேறு விஷயங்கள் பற்றி சிறப்பாக கலந்துரையாடினோம்,' என தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் விளையாட்டுத் துறை மீதான அவரது தொலைநோக்குப் பார்வையும் ஆதரவும்இந்தியர்களுக்கு எப்போதும் ஊக்கம் அளிக்கும்,' என குறிப்பிட்டுள்ளார். நீரஜ் சோப்ரா வெளியிட்ட செய்தியில், 'எங்களை சந்தித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்
0
Leave a Reply